இந்தியா

கேரளாவில் கஞ்சாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. மகன் உள்பட 9 பேர் கைது

Published On 2024-12-30 19:14 GMT   |   Update On 2024-12-30 19:14 GMT
  • புகை பிடித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலிடம் கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • கும்பலில் ஒருவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காயம்குளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் எம்.எல்.ஏ. பிரதிபா.

ஆலப்புழை மாவட்டம் குட்டநாட்டில் உள்ள தகழி பாலத்துக்கு அடியில் புகை பிடித்துக் கொண்டிருந்த ஒரு கும்பலிடம் கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கும்பலில் ஒருவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த கும்பலில் இருந்த 9 பேரை அவர்கள் கைது செய்தனர். கைதானவர்களில் பிரதிபா எம்.எல்.ஏ.வின் மகனும் அடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், 9 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும், தனது மகன் கைது செய்யப்படவில்லை என்று பிரதிபா மறுப்பு தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் மகன் பேசிக்கொண்டிருந்தபோது, அதிகாரிகள் கேள்வி மட்டுமே கேட்டதாக அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News