இந்தியா
திருப்பதி கோவிலில் தொடரும் சர்ச்சை - பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான்
- திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை முடிவதற்குள் திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்ததுடன் அதுபோன்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், திருப்பதியில் அன்னதான கூடத்தில் பக்தர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.