இந்தியா
2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அசாம் செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
- தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.
- காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் அசாம் மாநிலத்தில் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் 8ம் தேதியன்று (சனிக்கிழமை) தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.
மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அசாம் பயணத்தின்போது நாளை (7-ந்தேதி) காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
கவுகாத்தி ஐகோர்ட்டு தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா நாளை நடக்கிறது. இதிலும் ஜனாதிபதி முர்மு கலந்துகொண்டு பேசுகிறார். இந்த தகவல்களை ஜனாதிபதி மாளிகையின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.