இந்தியா
ரெப்போ வட்டியில் மாற்றவில்லை: 6.5 சதவீதமாக தொடரும்- ஆர்.பி.ஐ. கவர்னர் அறிவிப்பு
- 11-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை.
- ஜூலை- செப்டம்பர் காலாண்டில் ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் நீடிக்கும் என அறிவித்தார். இதன்மூலம் 11-வது முறையாக ரெப்போ வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது. ரிசர்வ் வங்கி மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிதான் ரெப்போ ஆகும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும். இது எதிர்பார்த்ததைவிட குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.