இந்தியா
எலிகளுக்கு 2 ஆண்டுகள் டீ, காபி கொடுத்து ஆராய்ச்சி- முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்

எலிகளுக்கு 2 ஆண்டுகள் டீ, காபி கொடுத்து ஆராய்ச்சி- முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2025-03-22 11:40 IST   |   Update On 2025-03-22 11:40:00 IST
  • ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது.
  • குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என தெரிவித்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்தனர்.

அப்போது சில எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான டீ, காபி மற்றும் குளிர்பானங்களை கொடுத்தனர்.

ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை டீ, காபி, குளிர்பானம் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சக்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய ஆராய்ச்சி அமெரிக்கா தேசிய சுகாதார நிறுவன ஆய்வு மூலம் உலகளாவிய உணவு முறை தளர்வுகளுடன் ஒப்பிடப்பட்டன. டீ, காபியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை இல்லாத டீ, காபி குடிக்க முயற்சி செய்யுங்கள். குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News