சரத்பவார் உதவியாளரிடம் இருந்து ரூ.25 கோடி தங்கம், ரூ.1 கோடி பணம் பறிமுதல்- அமலாக்கத்துறை நடவடிக்கை
- சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.
வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.