இந்தியா
null

சபரிமலையில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை

Published On 2024-11-25 21:15 GMT   |   Update On 2024-11-25 21:15 GMT
  • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
  • பம்பை, நிலக்கல் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பம்பை, நிலக்கல் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tags:    

Similar News