இந்தியா - நியூசிலாந்து போட்டியின் போது "ஸ்விக்கி"யில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்த ரசிகர்
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
- டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.
இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
தானேயை சேர்ந்த அந்த ரசிகர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை வழங்கிய நபர் இதுதொடர்பாக ஒரு படத்தை ஸ்விக்கி தளத்தில் பதிவிட்டார். அதில் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.
அதனுடான பதிவில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.