இந்தியா

திருப்பதி கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்களில் ரூ.47.56 கோடி உண்டியல் வசூல்

Published On 2023-10-24 04:30 GMT   |   Update On 2023-10-24 04:30 GMT
  • நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
  • திருப்பதியில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது.

நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

இந்த ஆண்டு நடைபெற்ற 2 பிரம்மோற்சவ விழாக்களில் மொத்தம் 11 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 57.64 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

33.78 லட்சம் பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர். 4.29 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது.

திருப்பதியில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News