மும்பை மெட்ரோ ரெயிலில் சைக்கிளுடன் பயணித்த வாலிபர்
- மும்பை மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்களது சைக்கிள்களை எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கிறது.
- வாலிபரின் வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும் மும்பை நகரில் பயணிகள் பலரும் பொது போக்குவரத்திற்காக மெட்ரோ ரெயிலை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தூரத்திற்கு மெட்ரோவில் சென்றாலும் அதன் பிறகு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல ஆட்டோ ரிக்ஷாக்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் வாலிபர் ஒருவர் மும்பை மெட்ரோ ரெயிலுக்குள் சைக்கிள் கொண்டு வரும் வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுடன் அவரது பதிவில் மும்பையில் பரபரப்பான தெருக்களில் சைக்கிள் ஓட்டுவது, பின்னர் உங்கள் பைக்குடன் மெட்ரோவுக்கு தடையின்றி மாறுவது ஒரு உற்சாகமான சாகசமாகும். இது நகரத்தின் பல்வேறு பகுதிகளை ஆராயவும், உள்ளூர் கலாசாரத்தில் மூழ்கவும் உங்களை அனுமதிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மும்பை மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்களது சைக்கிள்களை எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு நேரத்தில் ஒரு சைக்கிளுக்கு இடமளிக்க கூடிய வகையில் பிரத்யேக பார்க்கிங் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாலிபரின் வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.