இந்தியா

இளசுகளை மிரளவைத்த வயதான ஜோடி- வீடியோ வைரல்

Published On 2024-10-10 02:06 GMT   |   Update On 2024-10-10 02:06 GMT
  • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது.
  • இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள்.

பண்டிகை என்றாலே எல்லோருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும். நவராத்திரி பண்டிகையில் ஒரு வயதான ஜோடி மகிழ்ச்சியாக தாண்டியா நடனம் ஆடி இளசுகளையே மிரள வைத்திருக்கிறார்கள். அவர்களின் நடனம் சமூக வலைத்தளத்தில் 2 நாளில் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது. விழாவில் உற்சாகமான இசையைக் கேட்டதும் அவர்களுக்குள் இளமை பெருக்கடுத்துவிட ஆனந்தத்தில் தாண்டியா ஆட ஆரம்பித்துவிட்டனர்.

உடனே அக்கம்பக்கத்தில் இருந்த இளம் ஜோடிகள்கூட, தாங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு மூத்த ஜோடியின் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள். இணையவாசிகளின் இதயங்களையும் கவர்ந்து வைரலானார்கள்.

Tags:    

Similar News