இந்தியா
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு.. 7 மணி நிலவரப்படி 65.58 சதவீதம் வாக்குகள் பதிவு
- ஜம்மு காஷ்மீரில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்து.
- ஏழு மணி நிலவரப்படி 65.58 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்து. 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்களது ஜனநாயக உரிமையான வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
கடைசி கட்ட வாக்குப் பதிவின் போது இன்றிரவு 7 மணி நிலவரப்படி 65.58 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்றைய வாக்குப் பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இன்றைய வாக்குப் பதிவின் போது உதம்பூரில் அதிகபட்சமாக 72.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்நது சம்பாவில் 72.41 சதவீதமும், கத்துவாவில் 70.53 சதவீதமும், ஜம்முவில் 66.79 சதவீதமும், பந்திபோராவில் 64.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.