விராட் கோலியின் வீடியோ மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்திய மேற்கு வங்க போலீசார்
- வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
- ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
மேற்கு வங்க போலீசார் தனது சமூக வலைதள பக்கங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது ஐ.பி.எல். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க போலீசார் ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விராட் கோலி ஹெல்மெட் அணிந்து கொண்டு சிக்சர் விளாசும் ஒரு காட்சியுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி சிக்சர் அடிக்கும் காட்சி உள்ளது. அப்போது கோலி சிக்சர் அடித்த பந்து மைதானத்தில் கூட்டத்தினரின் மத்தியில் விழுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த மேற்கு வங்க போலீசார், வெற்றி தோல்விகளை யார் கணக்கு வைப்பது? அரசரின் கிரீடம் அவரது தலையில் அப்படியே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை விளக்கும் வகையில் உள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
#ViratKohli #SafeDriveSaveLife pic.twitter.com/2Jyn4r6p6Q
— West Bengal Police (@WBPolice) March 29, 2024