இந்தியா
பட்நாவிஸ்க்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன்: ஏக்நாத் ஷிண்டே
- சிவசேனா தலைவர் துணை முதல்வராக பதவி ஏற்க தயங்குவதாக செய்திகள் வெளியானது.
- கடைசி நேரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வராக பட்நாவிஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரும், அஜித் பவாரும் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர்.
துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே பின்னர் கூறியதாவது:-
முதலமைச்சரான தேவேந்திர பட்நாவிஸ்க்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன். நாங்கள் ஒரு அணியாக பணியாற்றுவோம்
இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, நிதிஷ் குமார், யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர் கலந்து கொண்டனர்.