இந்தியா

மேடையில் டான்ஸ் ஆடும் போதே சுருண்டு விழுந்த இளம்பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ

Published On 2025-02-10 08:00 IST   |   Update On 2025-02-10 08:00:00 IST
  • பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
  • நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களில் மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ம.பி. மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பரினிதா ஜெயின் என்ற 23 வயது இளம்பெண் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற தன் உறவினர் சகோதரியின் திருமண விழாவுக்கு சென்றார். அங்கு இசைக்கப்பட்ட பாலிவுட் பாலட்களுக்கு பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட 'ஹல்தி' விழாவின் போது பரினிதா மேடையில் நடனமாடியதை காட்டும் வீடியோ சமூக வலைதளகங்களில் அதிகம் பகிரப்படுகிறது. உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.

இதையடுத்து மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு CPR செய்ய முயன்றனர். எனினும், அவர் சுயநினைவுக்கு வரவில்லை.

இதன்பிறகு உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். எம்.பி.ஏ. பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். முன்னதாக பரினிதாவின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்தார்.


Tags:    

Similar News