இந்தியா
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
- அடுத்த 3 நாட்களுக்க கனமழை பெய்ய வாய்ப்பு.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.