இந்தியா

100 கிராம் கொத்தமல்லியை ரூ.131க்கு விற்பனை செய்த Zepto நிறுவனம்

Published On 2024-07-10 12:05 GMT   |   Update On 2024-07-10 12:05 GMT
  • 10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் நோக்கம்.
  • மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட "Zepto" நிறுவனம் பால்ய கால நண்பர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோரால் துவங்கப்பட்டது.

10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் துவங்கிய செப்டோ நிறுவனத்தின் பணி.

மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

செப்டோவில் அவ்வபோது ஆஃபர்களும் அறிவிக்கப்படுவது வாடிக்கை. இதனால், செப்டோவை பின்பற்றி வரும் பயனாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் செப்டோவில் கொத்தமல்லியின் விலை ரூ.100க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அரியானா மாநிலம் குருகிராமை நகரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் செப்டோவில் 100 கிராம் கொத்தமல்லி ரூ.131க்கு விற்கப்படுவதை தனது ஃபோனில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

கடந்த ஜூலை 8ம் தேதி அன்று பகிரப்பட்ட பதிவில், உள்நாட்டில் பெறப்பட்ட மற்றும் பிரீமியம் நறுமண கொத்தமல்லி கட்டுகளின் விலை 100 கிராமுக்கு முறையே ரூ.131 மற்றும் ரூ.141 என விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் அந்த பதிவில், "உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவோம்... அவர்கள் வளர உதவுவோம்" என்று அந்த நபர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "மலிவு மற்றும் அணுகல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது," என்று மற்றொரு நபர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News