செய்திகள்

சென்னை ஓபன் டென்னிஸ்: ராம்குமாருக்கு வைல்டு கார்டு சலுகை - வாவ்ரிங்கா பங்கேற்கவில்லை

Published On 2016-11-24 02:23 GMT   |   Update On 2016-11-24 02:23 GMT
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ராம்குமாருக்கு வைல்டு கார்டு சலுகை கிடைத்துள்ளது. இந்த போட்டியில் வாவ்ரிங்கா பங்கேற்கவில்லை.
சென்னை :

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதனுக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை நேற்று வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுவார்.

2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச், போர்னா கோரிச், ஸ்பெயினின் ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். அதே சமயம் சென்னை ரசிகர்களின் ‘ஏகோபித்த நாயகன்’ சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா இந்த முறை சென்னை ஓபனில் விளையாடவில்லை. சென்னை ஓபனை அதிக முறை (4) வென்ற சாதனையாளரான வாவ்ரிங்கா சென்னை ஓபனுக்கு பதிலாக அந்த சமயத்தில் பிரிஸ்பேனில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

Similar News