செய்திகள்

திருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி தொடங்கியது

Published On 2017-01-25 03:25 GMT   |   Update On 2017-01-25 03:25 GMT
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திருச்சியில் மாநில அளவில் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இது குறித்த விரிவாக செய்தியை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திருச்சியில் மாநில அளவில் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டிகள் பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி, ஜெ.ஜெ.கல்லூரி, தேசிய கல்லூரி ஆகிய இடங்களில் 6 மைதானங்களில் நடந்து வருகிறது.

போட்டியில் திருச்சி, தூத்துக்குடி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், கோவை, காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி ஆகிய 16 அணிகள் பங்கேற்றுள்ளன. கால் இறுதிக்கு முந்தைய போட்டிகள் நேற்று நடந்தன.

சேலம் அணியும், தூத்துக்குடி அணியும் மோதிய போட்டியில் சேலம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தூத்துக்குடி அணி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

திருச்சி அணியும், கிருஷ்ணகிரி அணியும் மோதிய போட்டியில் கிருஷ்ணகிரி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திருச்சி அணி 39.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் விழுப்புரம், திருவள்ளூர் அணியும் மோதின. முதலில் ஆடிய விழுப்புரம் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய திருவள்ளூர் அணி 34.5 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

இதேபோல நாமக்கல், வேலூர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய நாமக்கல் 26.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வேலூர் அணி 23.5 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதன் மூலம் கால் இறுதி போட்டிக்கு திருச்சி, சேலம், விழுப்புரம், வேலூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால் இறுதி போட்டிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. வருகிற 27-ந்தேதி அரை இறுதி போட்டி நடைபெறும்.

Similar News