செய்திகள்

ஏமாற்றத்திற்குப் பிறகும் வாழ்க்கை செல்கிறது: உசைன் போல்ட்

Published On 2017-02-01 12:55 GMT   |   Update On 2017-02-01 12:55 GMT
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை திருப்பியளித்தது ஏமாற்றம் என்றாலும், அதன்பின் வாழ்க்கை செல்கிறது என்று உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்:

உலகின் மிகவும் வேகமான மனிதன் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட். 2008 பீஜிங் ஒலிம்பிக், 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக் ஆகியவற்றில் 100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீ்ட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்று ‘டிரிபிள் டிரிபிள்’ என்ற பெருமையை பெற்றார்.

ஆனால் 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 4X100 மீ்ட்டர் தொடர் ஓட்டத்திற்கான ஜமைக்கா அணியில் உசைன் போல்ட் உடன் ஓடிய நெஸ்டா கார்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியது மறுபரிசோதனையில் தெரியவந்தது. இதனால் உசைன் போல்ட் தனது தங்க பதக்கத்தை திருப்பி ஒப்படைத்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிட்ரோ அத்லெடிக்ஸ் தொடருக்காக மெல்போர்ன் சென்றுள்ளார். மெல்போர்ன் ஏர்போர்ட்டில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு உசைன் போல்ட் பதில் அளித்தார்.

அப்போது ‘‘தொடக்கத்தில் உண்மையிலேயே நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் வாழ்க்கையில் இதுபோன்ற விஷங்கள் நடக்கலாம். நான் கவலையடையவில்லை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக காத்திக்கிறேன். இருந்தாலும் என்னுடைய பதக்கத்தை நான் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

Similar News