செய்திகள்

தொடர்ந்து மூன்று டெஸ்டில் 600 ரன்களுக்குள் மேல் குவித்து இந்தியா சாதனை

Published On 2017-02-10 12:53 GMT   |   Update On 2017-02-10 12:53 GMT
இன்றைய போட்டியில் 687 ரன்கள் குவித்ததன் மூலம் தொடர்ந்து மூன்று டெஸ்டில் 600 ரன்களுக்குள் மேல் குவித்து இந்தியா சாதனைப் படைத்துள்ளது.
ஐதராபாத்தில் இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் 600 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன் எந்தவொரு அணியும் இதுபோன்று தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் 600 ரன்கள் குவித்தது கிடையாது.

வங்காள தேசத்திற்கு முன் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரை 4-0 என இந்தியா கைப்பற்றியது. மும்பையில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் விராட் கோலியின் இரட்டை சதத்தால் இந்தியா 631 ரன்கள் குவித்தது.

பின் சென்னையில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்டில் கருண் நாயரின் முச்சதத்தால் இந்தியா 759 ரன்கள் குவித்தது. தற்போது விராட் கோலியின் இரட்டை சதத்தால் இந்தியா 687 ரன்கள் குவித்துள்ளது.

Similar News