செய்திகள்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்- இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 277

Published On 2018-07-20 13:49 GMT   |   Update On 2018-07-20 13:49 GMT
கொழும்பில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. #SLvSA
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில எடுபடவில்லை. இதனால் இருவரும் சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.



இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 60 ரன்கள் அடித்தார்.



மற்ற வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.



இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மகாராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #KeshavMaharaj #DanushkaGunathilaka #DimuthKarunaratne #DhananjayadeSilva
Tags:    

Similar News