செய்திகள்

தெற்காசிய ஜூனியர் கால்பந்து- நேபாளத்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

Published On 2018-11-03 10:47 GMT   |   Update On 2018-11-03 10:47 GMT
தெற்காசிய அணிகளுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி நேபாள அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
புதுடெல்லி:

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்ஏஎப்எப்) சார்பில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுத வரை முன்னேறிய இந்திய அணி, அரையிறுதியில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று நேபாள அணியை இந்திய அணி எதிர்கொண்டது. காத்மாண்டு ஏஎன்எப்ஏ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 18-வது நிமிடத்தில் இந்தியா கோல் அடித்தது. அதன்பின்னர் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இறுதியில் இந்தியா 1-0 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
Tags:    

Similar News