விளையாட்டு
null

ஒரு கிட்னியுடன் உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற அஞ்சு.. நெகிழ்ச்சி பேச்சு

Published On 2024-09-17 15:36 GMT   |   Update On 2024-09-18 00:28 GMT
  • தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.
  • கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் நீளம் தாண்டுதல் வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் தனக்கு ஒரு கிட்னி மட்டுமே உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தூரம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்று அசத்தினார். ஆனால் போட்டிக்கு முன்னதாகவே அதே ஆண்டில் நடந்த மருத்துவ பரிசோதனையில் தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பது அஞ்சு ஜார்ஜூக்கு தெரிய வந்துள்ளது.

அந்த வருடம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் அஞ்சு ஜார்ஜின் கணவரும் பயிற்சியாளருமான ராபர்ட் பாபி போட்டியில் கலந்துகொள்ள அஞ்சுவை ஊக்குவித்துள்ளார்.

இடைவேளை எடுத்துக்கொண்டு ஐரோப்பாவை சுற்றி பார்க்கவும், முந்தைய சாம்பியன்ஷிப் போட்டிகளை பார்க்கவும் ஊக்குவித்த தனது கணவர் தன்னை போட்டிக்காக மன ரீதியாக தயார் படுத்தினார் என்று அஞ்சு சமீபத்தில் நடத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News