கேன்டிடேட் செஸ்போட்டி: குகேஷ் 13-வது சுற்றில் வெற்றி
- 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
- மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.
டொராண்டோ:
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.
பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.
மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.
இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.
13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.
இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .
பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.
வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.