கிரிக்கெட் (Cricket)

வெற்றி பெற வேண்டிய போட்டியில் படுதோல்வி.. 4-வது டெஸ்ட்டில் இந்தியா சறுக்கிய தருணங்கள்

Published On 2024-12-30 08:11 GMT   |   Update On 2024-12-30 08:11 GMT
  • இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 3 கேட்ச்களை தவறவிட்டார்.
  • ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.

மெல்போர்ன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் படுதோல்வியை சந்திந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைய முக்கிய காரணமாக விளங்கிய தருணங்களை இந்த தொகுப்பின் மூலம் காணலாம்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்தியா 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ஜோடி அணியை மீட்டனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்தனர். இது மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. 

இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 91 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் எடுத்த போது லபுசேன் கொடுத்த எளிதான கேட்ச்சை சிலிப்பில் நின்ற ஜெய்ஸ்வால் தவறவிட்டார். அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணி 150 ரன்களுக்குள் அடங்கியிருக்கும்.

இதனையடுத்து கம்மின்ஸ் -லபுசேன் ஜோடி 7 விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சமயத்தில் கம்மின்ஸ் ஜடேஜா பந்து வீச்சில் தடுத்து ஆடுவார். அப்போது சில்லி பாயிண்டில் இருந்த ஜெய்ஸ்வால் கேட்ச்சை தவறவிடுவார். அவர் சில்லி பாயிண்டில் இருந்து செய்த பெரிய தவறு என்னவென்றால், பந்து வரும் வரை உர்கார்ந்து இருக்காமல் உடனே எந்திருத்து விடுவார். இதனை முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா அவரிடம் காட்டமாக கூறியிருந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் மீண்டும் அந்த தவறை செய்தார். அப்போது கம்மின்ஸ் 21 ரன்னில் தான் இருப்பார். இதனால் கம்மின்ஸ் தொடர்ந்து விளையாடினார்.

இதனையடுத்து 70 குவித்த லபுசென் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதுத்து வந்த ஸ்டார்க் 5 ரன்னிலும் கம்மின்ஸ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் அடுத்த விக்கெட்டும் சீக்கிரமாக எடுத்து இந்திய அணி 4-வது நாளில் 50 ரன்கள் குவித்தாலே வெற்றிக்கு வாய்ப்பாக அமையும் என்ற நிலையில் இருந்தது.

ஆனால் அதற்கு மாறாக பந்து வீச்சாளர்களான நாதன் லயன் மற்றும் போலண்ட் சிறப்பாக ஆடினர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. லயன் 41 ரன்னிலும், போலண்டு 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடை பெற்றது. ஆஸ்திரேலியா மேலும் 6 ரன் எடுப்பதற்குள் கடைசி விக்கெட்டான லயன் 41 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். அந்த அணி 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தனர். இதுவும் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.

2-வது இன்னிங்சில் 3 கேட்ச் மிஸ், கடைசி விக்கெட்டை எடுக்க முடியாமல் 61 ரன்கள் விட்டுக்கொடுத்தது, இந்திய அணி இந்த டெஸ்ட்டில் பாதகமாக அமைந்த தருணங்களாக பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது.

ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள். ரோகித் அவுட் ஆனது கூட பரவாயில்லை. விராட் கோலி அவுட் ஆனதுதான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. விராட் மீண்டும் அவுட் சைடு ஆப் பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அவர் அவுட் ஆனது எல்லாமே அவுட் சைடு ஆப் ஸ்டெம்ப். இதனால் அவரையும் ரோகித் சர்மாவையும் ஓய்வு பெறுமாறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. வந்ததும் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். டிராவை நோக்கி இந்த டெஸ்ட் சென்று கொண்டிருந்தது.

திடீரென ரிஷ்ப பண்டிற்கு என்ன தோனுச்சு என்று தெரியவில்லை. ஹெட் பந்து வீச்சை அதிரடியாக ஆடினார். அந்த பந்து பவுண்டரி லைகுக்கு சென்றது. அங்கிருந்த மிட்செல் மார்ஷ் கேட்ச் பிடித்து ரிஷப் பண்டை அவுட் செய்தார். 104 பந்தில் 30 ரன்கள் எடுத்த அவர் தொடர்ந்து அப்படியே விளையாடியிருந்தால் போட்டி டிராவிலாவது முடிந்திருக்கும். அதை செய்யாமல் அதிரடியாக விளையாடி முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த ஜடேஜா 2, நிதிஷ் 1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 7 ஓவர்கள் தடுப்பாட்டத்தில் விளையாடி வந்த ஜெய்ஸ்வால் கம்மின்ஸ் வீசிய ஷாட் பந்தை அடிக்க முற்பட்டு 84 ரன்னில் அவுட் ஆனார். இவரும் வாஷிங்டன் சுந்தர் களத்தில் நின்றிருந்தால் கூட ஆட்டம் டிரா செய்திருக்காலாம். ஆனால் இவர் அவுட் ஆனதும் இந்திய அணி தோல்விக்கு காரணமாகும்.

இதனையடுத்து வரும் வீரர்களாக ஆகாஷ் தீப், பும்ரா சிராஜ் இருந்தனர். தடுப்பாட்டம் ஆடிய சுந்தர், இவர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அதிகமாக அவரே விளையாடியிருக்க வேண்டும். அதை செய்யாமல் ஓவரின் முதல் பந்தையே 1 ரன் எடுத்து கொடுத்து இந்த வீரர்களை பேட்டிங் செய்ய வைத்தார். மேலும் ஓவரின் கடைசி பந்தை 1 ரன் எடுக்க அவர் முயற்சி செய்யவில்லை. யாராக இருந்தாலும் அதனை செய்திருக்க முயற்சிப்பார்கள். சுந்தர் அதனை முயற்சி செய்யவில்லை. மீதம் 15 ஓவர்கள் தான் இருந்தது. முயற்சி செய்திருக்காலம். இதுவும் இந்திய அணி தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.


இதனால் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News