ஆபாச சைகை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டாரா டிராவிஸ் ஹெட்? - வீடியோ வைரல்
- டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார்.
- அப்போது டிராவிஸ் ஹெட் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
மெல்போர்ன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல போர்னில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
105 ரன்கள் முன்னிலை யில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடியை டிராவிஸ் ஹெட் பிரித்தார். அவரது பந்துவீச்சில் பண்ட் ஆட்டமிழந்தார்.
அப்போது டிராவிஸ் ஹெட் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் முகம் சுழிக்கும்படி ஹெட் ஆபாச சைகை செய்ததாக குற்றம் சாட்டினார்கள்.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது கொண்டாடிய ஸ்டைலில் தான் இப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தவறான சைகையை ஹெட் காண்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.