மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மெல்போர்ன்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் ரெட்டி 114 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 70 ரன்னும், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 41 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சில நிமிடங்களில் நாதன் லயன் 41 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட், சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.