சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய நடுவர்கள் விலகல் - ஏன் தெரியுமா?
- சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஐ.சி.சி.யின் நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத்த் இடம் பெற்றனர். இந்த இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று நிதின் மேனன் அறிவித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டார். இதை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் விவரம்:
நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).
போட்டி நடுவர்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).