கிரிக்கெட் (Cricket)

இலங்கை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்: கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்- மாற்று வீரர்கள் அறிவிப்பு

Published On 2025-02-06 14:53 IST   |   Update On 2025-02-06 14:53:00 IST
  • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
  • சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க உள்ள நிலையில் இவர்கள் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

Tags:    

Similar News