இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: சச்சின் சாதனையை முறியடிப்பாரா ரோகித்?
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.