கிரிக்கெட் (Cricket)

சிட்னி டெஸ்டில் காயம் காரணமாக ஆகாஷ் தீப் இடம்பெற மாட்டார் எனத் தகவல்
- மெல்போர்ன் டெஸ்டில் முதுகு வலியுடன் பந்து வீசினார்.
- சிட்னி டெஸ்டில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தகவல்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் அணியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி காரணமாக சிட்னி டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறத.
மெல்போர்ன் டெஸ்டில் பந்து வீசும்போது அடிக்கடி முதுகு வலி காரணமாக முதலுதவி எடுத்துக் கொண்டார். முதுகு வலி இருந்தும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினால் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.