ஐ.பி.எல்.(IPL)
ஐபிஎல் தொடக்க விழா: மேடையில் ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட விராட் கோலி, ரிங்கு சிங்
null

ஐபிஎல் தொடக்க விழா: மேடையில் ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட விராட் கோலி, ரிங்கு சிங்

Published On 2025-03-22 19:11 IST   |   Update On 2025-03-22 21:43:00 IST
  • விராட் கோலியை கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என ஷாருக்கான் பாராட்டினர்.
  • ஆர்சிபி அணிக்காக 18 வருடமாக விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2025 சீசன் ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார்.

அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்சிபி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டி வரவேற்றார். அதற்கு விராட் கோலியை நன்றி தெரிவித்தார்.

பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் சற்று உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.

பின்னர் இருவருடன் ஆட்டம் போட்டார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பின்னர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக தலைவர்களை மேடைக்கு அழைத்தார். ஐபிஎல் கோப்பை மேடைக்கு கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கேகேஆர் அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

Tags:    

Similar News