
null
CSK Vs MI போட்டியானது இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியை போன்றது - ஹர்பஜன் சிங்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும்.
- சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், CSK vs MI போட்டியானது ஐபிஎல்-இல் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார்.