கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்- பாக். வீரர் அப்ரார் ஓபன் டாக்

Published On 2025-03-08 14:04 IST   |   Update On 2025-03-08 14:04:00 IST
  • விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது.
  • கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட.

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினாய் என்று விராட் கோலி என்னை பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது மனம் திறந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அப்ரார் அகமது, "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது. அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய பந்தில் முடிந்தால் சிக்ஸ் அடியுங்கள் என்று நான் அவரை சீண்டினேன். ஆனால் அவர் ஒருபோதும் கோவப்படவில்லை. கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம் நீ நன்றாக பந்துவீசினாய் என்று தெரிவித்தார். அவருடைய பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்தது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News