பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம்- வைரலாகும் வீடியோ
- சாம்பியன் டிராபியில் இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கமான ஒன்று.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
போட்டி ஆரம்பிக்கும் முன்பு களத்தில் ஆடும் அணிகளின் தேசிய கீதம் பாடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது.
சிறிது ஒலித்த பிறகு சுதாரித்த கொண்ட டிஜே இந்திய தேசிய கீதத்தை நிறுத்தி விட்டு இங்கிலாந்து அணியின் தேசிய கீதத்தை ஒலிக்க செய்தார். இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ரசிகர்கள் ஆக்ரோசமாக கத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.