இந்திய அணியுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் இல்லை - ஷாகித் அப்ரிடி
- துபாயில் நாளை இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அதனால் இந்தியா உடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, "பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஒரு மேட்ச்-வின்னர் என்பவர் ஆட்டத்தில் அணியை வெற்றி பெற வைப்பவர். தற்போது, பாகிஸ்தானில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.