கிரிக்கெட் (Cricket)

VIDEO: பட்டர் சிக்கன்தான் ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த எம்.எஸ்.தோனி

Published On 2025-02-22 12:10 IST   |   Update On 2025-02-22 12:10:00 IST
  • எந்த உணவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டர்கள் என எம்.எஸ்.தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
  • இப்போது வரை பட்டன் சிக்கன் தன எனக்கு பிடித்தமான உணவு என்று எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இதேபோல சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது எம்.எஸ்.தோனியிடம் எந்த உணவை நீங்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "இப்போது வரை பட்டன் சிக்கன் தன எனக்கு பிடித்தமான உணவு. 2004 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானேன். 2005ல், இந்தியா உட்பட எல்லா இடங்களிலும் விளையாட ஆரம்பித்தேன். அப்போது ஓட்டலில் , மதியம் மற்றும் இரவு உணவிற்கு, பட்டர் சிக்கன் , நாண் மற்றும் ஒரு மில்க் ஷேக் ஆர்டர் செய்வேன். இரண்டாவது நாள் மீண்டும் அதே உணவை ஆர்டர் செய்வேன்" என்று தெரிவித்தார்.

உடனே கேள்வி எழுப்பியர் பட்டர் பன்னீர் கூட இதேபோல் தான் இருக்கும் என்று கூற இந்த இரண்டும் ஒன்றல்ல என்று சிரித்தபடியே எம்.எஸ்.தோனி பதில் அளித்தார்.

Tags:    

Similar News