null
ரோகித் சர்மா போல சுதந்திரமாக விளையாடுங்கள்- கோலிக்கு இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்
- விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக தமக்குத் தாமே அதிக அழுத்தத்தை போடுகிறார்.
- சாதாரணமாக விளையாடினாலே அவரால் அசத்த முடியும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருப்பினும், இந்த போட்டியில் விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீப காலங்களாக தடுமாறி வரும் ரோகித் மற்றும் விராட் கோலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. டெஸ்ட் போட்டியில் சொதப்பிய ரோகித், ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் விராட் கோலி சொதப்பி வருகிறார்.
இந்நிலையில் ரோகித் சர்மா போல சுதந்திரமாக விளையாடுகள் என விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக தமக்குத் தாமே அதிக அழுத்தத்தை போடுகிறார் என்று நினைக்கிறேன். சாதாரணமாக விளையாடினாலே அவரால் அசத்த முடியும். ரோகித் சர்மாவை பாருங்கள். அவர் இங்கே வந்து சுதந்திரமாக விளையாடுகிறார்.