பாரா ஒலிம்பிக்: ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட இந்திய வீரர்
- இந்திய அணி இன்று மொத்தம் 4 பதக்கக்களை வென்றுள்ளது.
- இதில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி 3 பதக்கங்கள் பெற்றது.
பாரீஸ்:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா பங்கேற்றார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ராமகிருஷ்ணா, ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை தவறவிட்டுள்ளார். தேவரட்டி ராமகிருஷ்ணா 6 சுற்றில் மொத்தம் 630.7 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தார்.
முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமே பதக்க வாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள். நியூசிலாந்தின் ஜான்சன் மைக்கேல் 630.8 புள்ளிகள் பெற்று எட்டாவது இடம்பிடித்து பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
இதன்மூலம் ஒரு புள்ளியில் பதக்க வாய்ப்பை இந்திய வீரர் தேவரட்டி ராமகிருஷ்ணா தவறவிட்டுள்ளார்.