விளையாட்டு
null

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-06-04 05:57 GMT   |   Update On 2024-06-04 10:14 GMT
  • ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
  • பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

பாரிஸ்:

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), 7-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

Tags:    

Similar News