இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: டிராவை நோக்கி கடைசி டெஸ்ட்
- டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
- ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா (180 ரன்), கேமரூன் கிரீன் (114ரன்) ஆகியோர் சதம் அடைத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.
91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. டிராவிஸ் ஹெட், குனேமேன் தொடர்ந்து விளையாடினார்கள்.
இந்த ேஜாடியை அஸ் வின் பிரித்தார். அவரது பந்துவீச்சில் குனேமேன் (6 ரன்) எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து ஹெட்டுடன் லபு சேன் ஜோடி சேர்ந்தார்.
ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்து இருந்தது. ஹெட் 12 ரன்னுடனும், லபுசேன் 3 ரன்னுடனும் ஆடி கொண்டிருந்தனர்.
இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.