பாரிஸ் ஒலிம்பிக் 2024

பாகிஸ்தானின் பதக்க தாகத்தை தீர்த்த அர்ஷத் நதீம்.. வரலாற்று சாதனையுடன் தங்கம் வென்று அசத்தல்

Published On 2024-08-09 03:05 GMT   |   Update On 2024-08-09 03:05 GMT
  • ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
  • வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இது அர்ஷத் நதீமமுக்கான நாள் என்று தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியா ஒரு வெள்ளியும், 4 வெண்கலமும் வென்றுள்ளது. நேற்று நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் ஹாக்கி அணியே 3 முறை தங்கம் வென்றுள்ளது. எனவே தற்போதைய வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இது அர்ஷத் நதீமமுக்கான நாள் என்று தெரிவித்துள்ளார்.

 

 

அதுமட்டுமின்றி1984 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்களம் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது பாஸ்கிதான்.

கடைசியாக 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்சில்தான் பாகிஸ்தான் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஈட்டியெறிதலில் முந்திய வீரர்களின் ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்து 92.97 மீட்டர் ரெக்கார்டை பதிவு செய்து தங்கம் வென்றுள்ள அரஷத் நதீம் , 95 மீட்டர்களை தாண்டுவதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.  

 

Tags:    

Similar News