null
ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இந்தியர்களுக்கு இலவச விசா.. அட்லிஸ் CEO கொடுத்த ஆஃபர்!
- விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.
- நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டியெறிதல் பிரிவுக்கான போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 6] தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் கிஷோர் ஜெனாவும் விளையாடுகின்றனர்.
இதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்கப்படும் என்று ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் நீரஜ் தங்கம் வென்றால் Atlys இந்தியப் பயனர்களுக்கு உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல இலவச விசா வழங்கப்படும். இதன்மூலம் பயன்பெற விரும்புவார்கள் உங்களின் இமெயில் முகவரியை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.
நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.