பாரிஸ் ஒலிம்பிக் 2024

'விளையாட்டை மேம்படுத்த வேண்டிய நேரம் இது'.. வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா ஓபன் டாக்

Published On 2024-08-09 01:42 GMT   |   Update On 2024-08-09 03:26 GMT
  • இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • நமது தேசிய கீதம் தற்போது இங்கு ஒலிக்காது. ஆனால் வருங்காலத்தில் எங்காவது ஓர் இடத்தில் அது நிச்சயமாக ஒலிக்கும்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நாளை மறுநாள் ஆகஸ்ட் 11 உள்ளது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று நடந்த ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தனது வெற்றி குறித்து பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா, நமது நாட்டுக்காக பதக்கம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இது விளையாட்டை மேம்படுத்துவதற்கான தருணம். அனைவரும் அமர்ந்து விவாதித்து விளையாட்டை மேம்படுத்துவதே தற்போதுள்ள பணி.

இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது [பாரீஸ் ஒலிம்பிக்கில்], இந்த போட்டியும் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு வீரருக்கும் அவருக்கான நாள் என்பது வரும். இது அர்ஷத்தின் [பாகிஸ்தான் வீரர்] நாள். எனது சிறந்ததை[முயற்சியை] நான் வழங்கினேன். ஆனால் இன்னும் சில விஷயங்களை கண்டறிந்து அதில் மேலும் உழைப்பை செலுத்தியாக வேண்டி உள்ளது. நமது தேசிய கீதம் தற்போது இங்கு ஒலிக்காது. ஆனால் வருங்காலத்தில் எங்காவது ஓர் இடத்தில் அது நிச்சயமாக ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News