விளையாட்டு
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரியான்ஷு
- இந்திய வீரர் பிரியான்ஷு அயர்லாந்து வீரரை வீழ்த்தினார்.
- இதன்மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆர்லீன்ஸ்:
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், அயர்லாந்து வீரர் நட் நியென்னைச் சந்தித்தார்.
இதில் ரஜாவத் 21-12, 21-9 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டு சுமார் 44 நிமிடங்கள் நடைபெற்றது.