விளையாட்டு

புரோ கபடி லீக்- பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்

Published On 2024-12-01 19:34 GMT   |   Update On 2024-12-01 19:34 GMT
  • புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது.
  • தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன.

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 38-35 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News