மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது: பரபரப்பான கட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை டெஸ்ட்
- நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது.
- சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்னும், நியூசிலாந்து 373 ரன்னும் எடுத்தன.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 105.3 ஓவரில் 302 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இருந்தது.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் தேவை. கைவசம் 9 விக் கெட்டுகள் உள்ள நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இரவு 7 மணி வரை ஆட்டம் ஒரே செஷனாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர்.
டாம் லதாம் 25 ரன்னிலும் அடுத்து களம் வந்த நிக்கோல்ஸ் 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நியூசிலாந்து 90 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தனர். இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.