விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி

Published On 2024-07-28 14:45 IST   |   Update On 2024-07-28 14:45:00 IST
  • இன்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.
  • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.

பாரீஸ்:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான இளவேனில் மற்றும் ரமிதா ஜிண்டால் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதில் ரமிதா ஜிண்டால் சிறப்பாக செயல்பட்டு 5-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் 10-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.

Tags:    

Similar News