மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
- முதல் கேம்-ஐ கடுமையாக போராடி 26-24 எனக் கைப்பற்றியது.
- 2-வது கேமில் முதல் பாதியில் 8-11 என பின்னதங்கிய நிலையில், பின்னர் தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி மலோசியாவின் யெவ் சின் ஓங்- ஈ யி டெயோ-வை எதிர் கொண்டது.
இதில் முதல் கேமில் இரண்டு ஜோடிகளும் சிறப்பாக விளையாடியது. இறுதியில் இந்திய ஜோடி 26-24 என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றியது. 2-வது கேம்-ஐ 21-15 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் செட்டில் இந்திய ஜோடி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் 18-16 என முன்னிலை கண்டிருந்தது. ஆனால் மலேசிய ஜோடி தொடர்ந்து மூன்று புள்ளிகள் பெற்று 19-19 என சமநிலைப் பெற்றது. அத்துடன் 20-19 என முன்னிலையும் பெற்றது.
அதன்பின் இந்திய ஜோடி வெற்றி பெறுவதற்கு முன்னதாக தொடர்ந்து நான்கு புள்ளிகளை பெற்று முதல் கேம்-ஐ கைப்பற்றியது.
2-வது கேமில் மலேசிய ஜோடி 11-8 என முன்னிலைப் பெற்றிருந்தது. அனத்பின் 17 புள்ளிகளில் இந்திய ஜோடி 13 புள்ளிகளை பெற்று 21-15 என கேமை கைப்பற்றி வெற்றி பெற்றது.
அரையிறுதியில் தென்கொரியாவின் வொன் ஹோ கிம்- சியங் ஜெயி சியோ ஜோடியை எதிர்கொள்கிறது.